Skip to main content

Posts

இயற்கை வேளாண்மை

கடைசி மரமும் வெட்டுண்டு, கடைசி நதியும் விடமேறி., கடைசி மீனும் பிடிபடும்போதுதான் உரைக்கும், பணத்தை சாப்பிட முடியாதென்று.. உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே -புறநானுறு                                                                                                                                                                                 நிலத்தையும், நீரையும் பொறுத்துதான் நம் உண்ணும் உணவின் சத்துக்கள் இருக்கின்றன, ஆனால் இன்று நம் பசுமை புரட்சி(Green reevaluation) என்ற பெயரில் இரண்டையும் எவ்வளவு அசுத்தப்படுத்தமுடியுமோ, நச்சாக முடியுமோ அனைத்தையும் செய்யத்துவிட்டு இன்னும் செய்துகொண்டும் இருகின்றோம். ஆனால்  இதனால் வேளாண் குடிமக்களின் வாழ்க்கையும் பொருளாதாரமும் வளர்த்துவிட்டதா என்றல் நிச்சயமாக இல்லை.                                                                      ரசாயன உரங்கள் சந்தைக்கு வரும்முன் விளைபொருட்களின் விலை ஒரு நிலைத்தன்மையுடன்தான்( constant ratio) இருந்தது  இப்போது எந்த ஒரு அறுவடையின் போதும் வேளாண்குடிமக்களின் எண்ணம் செலவு செய்த ரூபாய் வந்தால் போதும் என
Recent posts

வேள்பாரி -சு . வெங்கடேசன்

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின், எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின், வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!                                                                                       -புறநானுறு               பேராசைக்காகவும் பொன்பொருளுக்காகவும், எல்லை  விரிவாக்கத்துக்காகவும் மூவேந்தர்களும் ஒரு குறுநில மன்னன் மீது போர்தொடுத்து கடைசியில் தோல்வியை பரிசாக பெற்று பாரியின் புகழை பறம்பு மலை கடந்து தமிழ் தேசம் முழுவதும் பரவியத்தின் கதை. பாரியின் புகழை பாணர்கள் பாடக்கேட்டு இது உண்மையா என்று அறிய கபிலர் அவர்கள் பறம்பு மலை செல்கிறார், அங்கிருந்து நீலன் என்பவன் அவரை பாரி இருக்கும் எவ்வியூர் அழைத்து செல்கிறான் அங்கு பாரி தமிழ் பெருங்கவி பறம்பு வந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். அங்கு நடக்கும் கொற்றவை கூத்தில் பறம்பில் உள்ள 14 குடிகளும் தாங்கள்  குடிகள் எவ்வாறு வேந்தர்களால் அழிக்கப்பட்டது என்பதை பாட்டாக பாடி கூத்தாடுவார்கள். பாண்டிய நாட்டில் குலசேகரபாண்டியன் மகன் பொதியவெற்பனுக்கு தி

இந்திய நீ(நி )தித்துறை

ஒரு காட்டில் உள்ள பசுக்கள் எல்லாம் வேகமாக காட்டைவிட்டு ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு யானை வந்து பசுவிடம் கேட்டதாம், ஏன் எல்லோரும் காட்டை விட்டுஓடிக்கொண்டிருகிறர்கள் என்று அதற்கு அந்த பசு சொன்னதாம், காட்டிலுள்ள எருமைமாடுகளை எல்லாம் சிறை  பிடிக்க அரசு உத்தரவு போட்டுள்ளதாம் என்று, அதற்கு அந்த யானை கேட்டதாம் எருமைகளை பிடிக்கத்தானே அரசு உத்தரவு போட்டுள்ளது நீங்கள் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறீகள்.அந்த பசு சொன்னதாம் நான் எருமை இல்லை பசு என்று உனக்கு தெரியும் அதை  நான் இந்த நீதி  மன்றத்தில் நிரூபிக்க குறைந்தது எனக்கு 30 வருடங்கள் ஆகும் அதனால்தான் எதற்கு வம்பு என்று நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். இதை கேட்ட பின் அந்த யானையும் ஓட ஆரம்பித்ததாம் அந்த கட்டை விட்டு. இந்திய நீதிமன்றம் தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.(ஆனால் எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ அவர்களுக்கு சாதகமாக 90% தீர்ப்பு வரும் )இந்த ஆண்டு வரை நிலுவையில் உள்ள வழக்குகளின்    எண்ணிக்கை   43 லட்சம்(civil & criminal etc) இந்த நிலையில் உச்ச  நநீதிமன்றம் எதாவது ஒரு அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்கினால்( விதிவிலக்காக ) அடுத்த ஒருமணி நேரத்தில

கோவேறு கழுதைகள்-இமையம்

எழுத்தாளர் இமையம் அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல், ஊர்காரர்களை எதிர்பார்த்து வாழ்கையை நடத்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை காலமாற்றங்களினால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும், ஊரார்களின் மனமும் காலத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு மாறுகின்றது என்றும் கூறும் நாவல் . ஆரோக்கியம் , சவுரி ,ஜோசப் ,சகாயம் ,மேரி மற்றும் பீட்டர் இவர்கள்தான் கதையின் முதன்மை பாத்திரங்கள், ஊரில் இருக்கும் வண்ணான் குடும்பம், காலையில் துணிகளை வாங்கி கொண்டு தொரப்பாட்டுக்கு சென்று வெளுத்து பின் இரவு சாப்பாட்டுக்காக குண்டங்களை தூக்கிக்கொண்டு ஓவொரு வீடாக சென்று, அம்மா வண்ணாத்திமக வந்திருக்கேனு சொல்லி சாப்பாடு வாங்கி வந்து சாப்பிடுவது, பின் விதைப்பு அறுப்பு காலங்களில் களத்திற்கு சென்று வேலை செய்து தானியங்களை சேர்ப்பது. இதுதான் அவர்களது வாழ்க்கை . இதன்பின் வரும் அவர்கள் குடும்ப பிரச்சினைகள் அடுத்து ஊரார்களின் சுரண்டல்கள் மகன்கள் மகள் வாழ்க்கை, இனி இந்த ஊரில் நம்மால் வாழ முடியுமா என்ற எண்ணங்கள், பின் ஊரில் ஒரு பெண்ணுக்கு பிரசவவலி எடுத்ததும் முதலில் வந்து ஆரோக்கியத்தை கூப்பிடும் உறவுக்காரர்கள் , பிரசவ

கோடம்பாக்கத்துக்காரர்களின் அரசியல் கூத்து

  இந்திய  அரசியல்  சட்டப்படி 25 வயது நிரம்பியவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அவர்கள் இந்திய குடிமகனாகஇருக்கவேண்டும். தமிழ்நாட்டில் குடிமகன்கள் ஏராளம். ஆனால் இவற்றைமட்டுமே வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட ஒரு கூட்டம் வந்திருக்கின்றது.தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை திராவிட கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துதான் இந்த வளர்ச்சியை பெற்றிருக்கின்றன.அன்றைய காலகட்டத்தில் ஹிந்தி எதிர்ப்புப்போராட்டம் ஒரு மிகப்பெரும் திருப்புமுனையாக இருந்தது அண்ணா வளர்த்த தி மு க எழுச்சிபெற, சுயமரியாதை, சாதிமறுப்பு, இடஒதிக்கீடு, கடவுள்மறுப்பு,பெண்கள் முன்னெற்றம் இன்னும் பல முன்னெடுப்புகளால் தமிழ்நாட்டில் அரசமைத்தது தி மு க. ஆனால் இன்று வந்திருக்கும் கோடம்பாக்க கும்பல் " கோட்டைக்கு குறுக்குவழி கோடம்பாக்கம்" என்பதை தவிர வேறு எந்த கொள்கையும் இல்லை, திராவிட கட்சிகள் தொடங்கும்போது இருந்த பிரச்னைகளைவிட இன்று ஏராளமான பிரச்சனைகள் தமிழ்நாட்டை சூழ்ந்து இருக்கிறது. இதில் ஒன்றையாவது இவர்கள் தீவிரமாக பேசியிருக்கர்களா இல்லைகளத்துக்கு சென்று போராடியிருக்கர்களா.சிலர் படம் வெளிவரும் சமயத்தில

அரசியல் ஆட்டம்

தமிழ்நாட்டில் அரசியல் எவ்வளவு தரம் தாழ்த்துவிட்டது என்று எல்லோருக்கும் தெரியும். திராவிட கட்சிகள் எதற்கு ஆரம்பிக்கப்பட்டது என்ற அடிப்படையை மறந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறது. அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்வாராம் நம்கட்சி வளர்ந்தது  வாய்மையால் என்று. அவர் சொன்ன வாய்மை எதுவென்றும் அவரே சொல்கிறார் , பேசுகின்ற வாயாலும், எழுதுகின்ற மையலும் என்று. ஆனால் இன்று அந்த இரண்டு கட்சிகளின் தலைவர்கள் பேசுவதை பார்த்தால் இந்த கட்சிகளை வளர்த்து ஆளாக்கிய தலைவர்கள் நொந்துவிடுவார்கள். அவர்கள் பேசுவதால் மட்டும் அல்ல, அவர்கள் செயலிலும் தெரிகிறது அவர்களால் இனி ஒரு உபயோகமமும் தமிழ்நாட்டிற்கில்லை என்று. இனி திராவிட காட்சிகளை கைக்கழுவிட்டு நகரவேண்டும் நாம். இப்படி சொன்னால் நிறையபேர் கேட்பார்கள் திராவிடம் தமிழருக்கு எதுவும் செய்யவில்லையா என்று, செய்தது இல்லை என்றுயாரும் மறுக்கவில்லை மறுக்கவும்கூடாது, அனால் இன்று அந்த திராவிட சித்தாந்தத்தை அவர்களே மறந்துவிட்டார்கள். எனவே இனிவரும் காலதேர்தல்களில் உங்களுக்கானவர்களுக்கு வாக்குகளை செலுத்துங்கள், ஆனால் விற்காதீர்கள்.நீங்கள் செலுத்தும் வாக்கு உங்களுக்கானது மட்டும் அல்

கொலஸ்ட்ராலும்: வெளிச்சத்துக்கு வந்த மருத்துவ அரசியல்.

Sundar P  : இப்போது மருத்துவ உலகத்தில் மட்டுமல்ல... உணவுச் சந்தையிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருப்பது எண்ணெயும் கொலஸ்ட்ராலும்தான். அப்படி என்ன மாற்றம் நடந்துவிட்டது எண்ணெய் பயன்பாட்டில்? பண மதிப்பிழப்பு விவகாரத்தில், நாமெல்லாம் புதிய இரண்டாயிரம் ரூபாய்க்காக ஏ.டி.எம் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, மருத்துவ உலகம் கொலஸ்ட்ரால் பற்றி, தான் ஏற்படுத்தி வந்த விழிப்புஉணர்வை வாபஸ் பெற்றுக்கொண்டது. மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில், கொலஸ்ட்ரால் பற்றிய தொடர் விவாதங்கள் உருவாகவும், கொழுப்பு பயமுறுத்தலை வாபஸ் பெறவும் காரணம் 2015-ம் ஆண்டின் யு.எஸ்.டயட்ரி அட்வைசரி கமிட்டியின் (USDA) அறிவிப்புதான். நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் குதிரை வண்டியில் மைக் கட்டி பிரசாரம் செய்யும் அளவுக்கு `கொலஸ்ட்ரால் உடம்புக்கு நல்லது அல்ல. எண்ணெய் மோசமானது’ என்று சொல்லிக்கொண்டிருந்த அமெரிக்க உணவியல் நிபுணர்கள், தலைகீழாக பல்டியடித்தார்கள். அமெரிக்காவின் பிரதான உணவாக இருந்த கொழுப்பு உணவுகள், இதய நோய் பயத்தால் ஒரு கட்டத்தில் தீவிர பிரசாரம் மூலம் கைவிடப்பட்டன. முட்டைகளையும், இறைச்சியையும் மிகக் குறைவாக அமெரிக்க மக்கள