Skip to main content

Posts

Showing posts from March, 2019

கொலஸ்ட்ராலும்: வெளிச்சத்துக்கு வந்த மருத்துவ அரசியல்.

Sundar P  : இப்போது மருத்துவ உலகத்தில் மட்டுமல்ல... உணவுச் சந்தையிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருப்பது எண்ணெயும் கொலஸ்ட்ராலும்தான். அப்படி என்ன மாற்றம் நடந்துவிட்டது எண்ணெய் பயன்பாட்டில்? பண மதிப்பிழப்பு விவகாரத்தில், நாமெல்லாம் புதிய இரண்டாயிரம் ரூபாய்க்காக ஏ.டி.எம் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, மருத்துவ உலகம் கொலஸ்ட்ரால் பற்றி, தான் ஏற்படுத்தி வந்த விழிப்புஉணர்வை வாபஸ் பெற்றுக்கொண்டது. மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில், கொலஸ்ட்ரால் பற்றிய தொடர் விவாதங்கள் உருவாகவும், கொழுப்பு பயமுறுத்தலை வாபஸ் பெறவும் காரணம் 2015-ம் ஆண்டின் யு.எஸ்.டயட்ரி அட்வைசரி கமிட்டியின் (USDA) அறிவிப்புதான். நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் குதிரை வண்டியில் மைக் கட்டி பிரசாரம் செய்யும் அளவுக்கு `கொலஸ்ட்ரால் உடம்புக்கு நல்லது அல்ல. எண்ணெய் மோசமானது’ என்று சொல்லிக்கொண்டிருந்த அமெரிக்க உணவியல் நிபுணர்கள், தலைகீழாக பல்டியடித்தார்கள். அமெரிக்காவின் பிரதான உணவாக இருந்த கொழுப்பு உணவுகள், இதய நோய் பயத்தால் ஒரு கட்டத்தில் தீவிர பிரசாரம் மூலம் கைவிடப்பட்டன. முட்டைகளையும், இறைச்சியையும் மிகக் குறைவாக அமெரிக்க மக்கள

தோள் சீலைப் போராட்டம்

பார்ப்பன நம்பூதிரிகள் கேரளாவில் யாரையும் விட்டுவைக்க வில்லை, அவர்கள் போர் மறவர்களான நாயர்களை தரவாடு என்ற குடும்ப அமைப்பை கொண்டு இழிவுபடுத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டனர், அரசர்களிடம் அதுபோன்ற ஏற்பாடு செல்லாது என்பதால் அவர்களை மஹாபலி கதையை கூறி அரசவமத்தினர் அனைவரும் விஷ்ணுவின் அடிமைகள் என நம்பவைத்தனர், அதனால் அரசனின் எல்லா சொத்துக்களும் கோயிலுக்கே சொந்தம் என்று சட்டத்தினை மாற்றினார், அரசன் எந்த செலவு செய்வதென்றாலும் கடவுளிடம் நேரடி தொடர்பில் இருக்கும் பார்ப்பன நம்பூதிரி ஒப்புதல் இல்லாமல் செய்ய கூடாது. இது மட்டுமல்ல அரசனாக ஒரு இளவரசன் முடிசூட்டி கொள்ளும் போது தன் பெற்றோர் வைத்த பேரையும் மாற்றிக்கொள்ள வேண்டும், அதன் பின் அவர்களின் பெயர் அவர் பிறந்த நட்சத்திரமாக மட்டும் இருக்கும், உதாரணமாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த இளவரசன் அரசனாக போது அவன் பெயர் சுவாதி திருநாள் என்று மாற்றப் படும். ஐந்து அரசர்கள் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தால் எல்லோரும் சுவதி திருநாள் தான், ஆக எந்த அரசன் எந்த நல்லது செய்தான் என்றும் யாருக்கும் தெரியாது அரசவம்சம், நம்பூதிரி வம்சம், நாயர் வம்சம்,