Skip to main content

Posts

Showing posts from January, 2020

இயற்கை வேளாண்மை

கடைசி மரமும் வெட்டுண்டு, கடைசி நதியும் விடமேறி., கடைசி மீனும் பிடிபடும்போதுதான் உரைக்கும், பணத்தை சாப்பிட முடியாதென்று.. உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே -புறநானுறு                                                                                                                                                                                 நிலத்தையும், நீரையும் பொறுத்துதான் நம் உண்ணும் உணவின் சத்துக்கள் இருக்கின்றன, ஆனால் இன்று நம் பசுமை புரட்சி(Green reevaluation) என்ற பெயரில் இரண்டையும் எவ்வளவு அசுத்தப்படுத்தமுடியுமோ, நச்சாக முடியுமோ அனைத்தையும் செய்யத்துவிட்டு இன்னும் செய்துகொண்டும் இருகின்றோம். ஆனால்  இதனால் வேளாண் குடிமக்களின் வாழ்க்கையும் பொருளாதாரமும் வளர்த்துவிட்டதா என்றல் நிச்சயமாக இல்லை.                                                                      ரசாயன உரங்கள் சந்தைக்கு வரும்முன் விளைபொருட்களின் விலை ஒரு நிலைத்தன்மையுடன்தான்( constant ratio) இருந்தது  இப்போது எந்த ஒரு அறுவடையின் போதும் வேளாண்குடிமக்களின் எண்ணம் செலவு செய்த ரூபாய் வந்தால் போதும் என