Skip to main content

கோடம்பாக்கத்துக்காரர்களின் அரசியல் கூத்து

 இந்திய அரசியல்  சட்டப்படி 25 வயது நிரம்பியவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அவர்கள் இந்திய குடிமகனாகஇருக்கவேண்டும். தமிழ்நாட்டில் குடிமகன்கள் ஏராளம். ஆனால் இவற்றைமட்டுமே வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட ஒரு கூட்டம் வந்திருக்கின்றது.தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை திராவிட கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துதான் இந்த வளர்ச்சியை பெற்றிருக்கின்றன.அன்றைய காலகட்டத்தில் ஹிந்தி எதிர்ப்புப்போராட்டம் ஒரு மிகப்பெரும் திருப்புமுனையாக இருந்தது அண்ணா வளர்த்த தி மு க எழுச்சிபெற, சுயமரியாதை, சாதிமறுப்பு, இடஒதிக்கீடு, கடவுள்மறுப்பு,பெண்கள் முன்னெற்றம் இன்னும் பல முன்னெடுப்புகளால் தமிழ்நாட்டில் அரசமைத்தது தி மு க.

ஆனால் இன்று வந்திருக்கும் கோடம்பாக்க கும்பல் "கோட்டைக்கு குறுக்குவழி கோடம்பாக்கம்" என்பதை தவிர வேறு எந்த கொள்கையும் இல்லை, திராவிட கட்சிகள் தொடங்கும்போது இருந்த பிரச்னைகளைவிட இன்று ஏராளமான பிரச்சனைகள் தமிழ்நாட்டை சூழ்ந்து இருக்கிறது. இதில் ஒன்றையாவது இவர்கள் தீவிரமாக பேசியிருக்கர்களா இல்லைகளத்துக்கு சென்று போராடியிருக்கர்களா.சிலர் படம் வெளிவரும் சமயத்தில் 20 வருடம் கோமாவிலிருந்து வந்தது மாதிரி அந்த நாள் மட்டும் வாயைதிறப்பார்கள் பிறகு அவர்களே   அதற்காக  மன்னிப்பும் கேட்பார்கள் அவர்களை நம்பினால் நம்கதி.

இன்னும் சிலர் அவர் துறையில் விடுப்பு எடுத்திவிட்டு ஒரு part time job ஆக, இல்லை ஒரு particular time job ஆக அரசியலுக்கு வருவார்கள். அதுவும் தேர்தல் சமயத்தின் போதுமட்டும், அப்போது விழும் வாக்குகளின் அடிப்படையில் அவர்களது களப்பணி இருக்கும் .களப்பணியென்றதும் அவர்கள் அதிகமாக வாக்கு வாங்கிய இடங்களில் பணி செய்வது இல்லை, குறைவான வாக்குவாங்கிய இடங்களில் தங்களை publicity   செய்வது .தேர்தல் முடிந்ததும் அவர்கள் அவர் சம்மந்தப்பட்ட துறைக்கு சென்று தங்கள் வேலையே பார்ப்பார்கள், இடைத்தேர்தல்களுக்குஎல்லாம் வரமாட்டார்கள் only சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் மட்டுமே அவர்களது இலக்கு.மீண்டும் அடுத்த மேற்சொன்ன இரண்டு தேர்தலில்களில் ஏதாவது ஒன்றில்  அவர்களை காணலாம் அதுவரை உங்களது பிரச்சனைகளோடு நீங்கள் காத்திருக்க வேண்டும்.

இன்னும் ஒருரகத்தினர் இருக்கின்றனர் நன் எப்ப வருவேன் எப்படிவருவேன் யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல ...., நமக்கு தெரியலையா பிரச்சினை இல்ல ஆனா அவருக்கே தெரியலின்றது தான் பிரச்னை. இவரை பத்தி ஒன்னும் பெருசா சொல்லவேணாம். ஏன்னா அவரு என்ன பேசுறாருன்னு அவருக்கே தெரியாது. கொள்கை என்னனு கேட்ட தலையை ஒரு நிமிடம் சுத்திருச்சின்னு சொல்வாரு. எதாவது hot topic வந்த யாருக்கும் நோகாம ஒரு கருத்து சொல்வாரு. அவரு அரசியல் பற்றி press meet   கொடுக்கறது அவரது படத்துக்கான promotion அவருக்கு மட்டும் தான் தெரியும்.



இதுல என்ன பிரியா விடயம்னா இவர்களை நம்பி இளைஞர்கள் போவது ஒரு மாற்றை தேடின்னு வைத்துக்கொள்ளலாம் , ஆனால் சில பெரியவர்கள் எந்த நம்பிக்கையின் அடிப்படையில அவர்கள் பின்னல் நிற்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.


அது சரி வாக்கை விற்கும் குடிமகன்கள் இருக்கும் இந்த நாட்டில் வேட்பாளர்களை பற்றிப்பேசும் தகுதி நமக்கு இல்லை. காசுவாங்கி வாக்குச்செலுத்துபவர்களுக்கு காமராசரும் காக்கணுமா வருவார்கள் , கண்டகண்ட காரிசடைகள் நமக்கு.
  

















Comments

Popular posts from this blog

கோவேறு கழுதைகள்-இமையம்

எழுத்தாளர் இமையம் அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல், ஊர்காரர்களை எதிர்பார்த்து வாழ்கையை நடத்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை காலமாற்றங்களினால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும், ஊரார்களின் மனமும் காலத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு மாறுகின்றது என்றும் கூறும் நாவல் . ஆரோக்கியம் , சவுரி ,ஜோசப் ,சகாயம் ,மேரி மற்றும் பீட்டர் இவர்கள்தான் கதையின் முதன்மை பாத்திரங்கள், ஊரில் இருக்கும் வண்ணான் குடும்பம், காலையில் துணிகளை வாங்கி கொண்டு தொரப்பாட்டுக்கு சென்று வெளுத்து பின் இரவு சாப்பாட்டுக்காக குண்டங்களை தூக்கிக்கொண்டு ஓவொரு வீடாக சென்று, அம்மா வண்ணாத்திமக வந்திருக்கேனு சொல்லி சாப்பாடு வாங்கி வந்து சாப்பிடுவது, பின் விதைப்பு அறுப்பு காலங்களில் களத்திற்கு சென்று வேலை செய்து தானியங்களை சேர்ப்பது. இதுதான் அவர்களது வாழ்க்கை . இதன்பின் வரும் அவர்கள் குடும்ப பிரச்சினைகள் அடுத்து ஊரார்களின் சுரண்டல்கள் மகன்கள் மகள் வாழ்க்கை, இனி இந்த ஊரில் நம்மால் வாழ முடியுமா என்ற எண்ணங்கள், பின் ஊரில் ஒரு பெண்ணுக்கு பிரசவவலி எடுத்ததும் முதலில் வந்து ஆரோக்கியத்தை கூப்பிடும் உறவுக்காரர்கள் , பிரசவ

இந்திய நீ(நி )தித்துறை

ஒரு காட்டில் உள்ள பசுக்கள் எல்லாம் வேகமாக காட்டைவிட்டு ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு யானை வந்து பசுவிடம் கேட்டதாம், ஏன் எல்லோரும் காட்டை விட்டுஓடிக்கொண்டிருகிறர்கள் என்று அதற்கு அந்த பசு சொன்னதாம், காட்டிலுள்ள எருமைமாடுகளை எல்லாம் சிறை  பிடிக்க அரசு உத்தரவு போட்டுள்ளதாம் என்று, அதற்கு அந்த யானை கேட்டதாம் எருமைகளை பிடிக்கத்தானே அரசு உத்தரவு போட்டுள்ளது நீங்கள் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறீகள்.அந்த பசு சொன்னதாம் நான் எருமை இல்லை பசு என்று உனக்கு தெரியும் அதை  நான் இந்த நீதி  மன்றத்தில் நிரூபிக்க குறைந்தது எனக்கு 30 வருடங்கள் ஆகும் அதனால்தான் எதற்கு வம்பு என்று நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். இதை கேட்ட பின் அந்த யானையும் ஓட ஆரம்பித்ததாம் அந்த கட்டை விட்டு. இந்திய நீதிமன்றம் தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.(ஆனால் எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ அவர்களுக்கு சாதகமாக 90% தீர்ப்பு வரும் )இந்த ஆண்டு வரை நிலுவையில் உள்ள வழக்குகளின்    எண்ணிக்கை   43 லட்சம்(civil & criminal etc) இந்த நிலையில் உச்ச  நநீதிமன்றம் எதாவது ஒரு அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்கினால்( விதிவிலக்காக ) அடுத்த ஒருமணி நேரத்தில

கொலஸ்ட்ராலும்: வெளிச்சத்துக்கு வந்த மருத்துவ அரசியல்.

Sundar P  : இப்போது மருத்துவ உலகத்தில் மட்டுமல்ல... உணவுச் சந்தையிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருப்பது எண்ணெயும் கொலஸ்ட்ராலும்தான். அப்படி என்ன மாற்றம் நடந்துவிட்டது எண்ணெய் பயன்பாட்டில்? பண மதிப்பிழப்பு விவகாரத்தில், நாமெல்லாம் புதிய இரண்டாயிரம் ரூபாய்க்காக ஏ.டி.எம் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, மருத்துவ உலகம் கொலஸ்ட்ரால் பற்றி, தான் ஏற்படுத்தி வந்த விழிப்புஉணர்வை வாபஸ் பெற்றுக்கொண்டது. மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில், கொலஸ்ட்ரால் பற்றிய தொடர் விவாதங்கள் உருவாகவும், கொழுப்பு பயமுறுத்தலை வாபஸ் பெறவும் காரணம் 2015-ம் ஆண்டின் யு.எஸ்.டயட்ரி அட்வைசரி கமிட்டியின் (USDA) அறிவிப்புதான். நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் குதிரை வண்டியில் மைக் கட்டி பிரசாரம் செய்யும் அளவுக்கு `கொலஸ்ட்ரால் உடம்புக்கு நல்லது அல்ல. எண்ணெய் மோசமானது’ என்று சொல்லிக்கொண்டிருந்த அமெரிக்க உணவியல் நிபுணர்கள், தலைகீழாக பல்டியடித்தார்கள். அமெரிக்காவின் பிரதான உணவாக இருந்த கொழுப்பு உணவுகள், இதய நோய் பயத்தால் ஒரு கட்டத்தில் தீவிர பிரசாரம் மூலம் கைவிடப்பட்டன. முட்டைகளையும், இறைச்சியையும் மிகக் குறைவாக அமெரிக்க மக்கள