Skip to main content

கோவேறு கழுதைகள்-இமையம்

Image result for koveru kaluthaigalஎழுத்தாளர் இமையம் அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல்,
ஊர்காரர்களை எதிர்பார்த்து வாழ்கையை நடத்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை காலமாற்றங்களினால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும், ஊரார்களின் மனமும் காலத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு மாறுகின்றது என்றும் கூறும் நாவல் .

ஆரோக்கியம் , சவுரி ,ஜோசப் ,சகாயம் ,மேரி மற்றும் பீட்டர் இவர்கள்தான் கதையின் முதன்மை பாத்திரங்கள், ஊரில் இருக்கும் வண்ணான் குடும்பம், காலையில் துணிகளை வாங்கி கொண்டு தொரப்பாட்டுக்கு சென்று வெளுத்து பின் இரவு சாப்பாட்டுக்காக குண்டங்களை தூக்கிக்கொண்டு ஓவொரு வீடாக சென்று, அம்மா வண்ணாத்திமக வந்திருக்கேனு சொல்லி சாப்பாடு வாங்கி வந்து சாப்பிடுவது, பின் விதைப்பு அறுப்பு காலங்களில் களத்திற்கு சென்று வேலை செய்து தானியங்களை சேர்ப்பது. இதுதான் அவர்களது வாழ்க்கை .

இதன்பின் வரும் அவர்கள் குடும்ப பிரச்சினைகள் அடுத்து ஊரார்களின் சுரண்டல்கள் மகன்கள் மகள் வாழ்க்கை, இனி இந்த ஊரில் நம்மால் வாழ முடியுமா என்ற எண்ணங்கள், பின் ஊரில் ஒரு பெண்ணுக்கு பிரசவவலி எடுத்ததும் முதலில் வந்து ஆரோக்கியத்தை கூப்பிடும் உறவுக்காரர்கள் , பிரசவம் நல்ல பாடியமுடிந்த பின் ஊரார் பேசும் பேச்சுக்கள் "ஆரோக்கியத்தை விட வேறு யாராலும் இதை இவ்வளவு சாதாரணமாக செய்யமுடியாது என்றும் சொல்லும்போது அவள் பட்ட வலிகள் எல்லாம் மறந்து போகின்றன.

பின் கனத்த  மனதோடு நாவல் நிறைவு பெறுகின்றது அதன் பின் அது நம்மை பிடித்துக்கொள்கிறது.





Comments

Popular posts from this blog

இந்திய நீ(நி )தித்துறை

ஒரு காட்டில் உள்ள பசுக்கள் எல்லாம் வேகமாக காட்டைவிட்டு ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு யானை வந்து பசுவிடம் கேட்டதாம், ஏன் எல்லோரும் காட்டை விட்டுஓடிக்கொண்டிருகிறர்கள் என்று அதற்கு அந்த பசு சொன்னதாம், காட்டிலுள்ள எருமைமாடுகளை எல்லாம் சிறை  பிடிக்க அரசு உத்தரவு போட்டுள்ளதாம் என்று, அதற்கு அந்த யானை கேட்டதாம் எருமைகளை பிடிக்கத்தானே அரசு உத்தரவு போட்டுள்ளது நீங்கள் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறீகள்.அந்த பசு சொன்னதாம் நான் எருமை இல்லை பசு என்று உனக்கு தெரியும் அதை  நான் இந்த நீதி  மன்றத்தில் நிரூபிக்க குறைந்தது எனக்கு 30 வருடங்கள் ஆகும் அதனால்தான் எதற்கு வம்பு என்று நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். இதை கேட்ட பின் அந்த யானையும் ஓட ஆரம்பித்ததாம் அந்த கட்டை விட்டு. இந்திய நீதிமன்றம் தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.(ஆனால் எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ அவர்களுக்கு சாதகமாக 90% தீர்ப்பு வரும் )இந்த ஆண்டு வரை நிலுவையில் உள்ள வழக்குகளின்    எண்ணிக்கை   43 லட்சம்(civil & criminal etc) இந்த நிலையில் உச்ச  நநீதிமன்றம் எதாவது ஒரு அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்கினால்( விதிவிலக்காக ) அடுத்த ஒருமணி நேரத்தில

கொலஸ்ட்ராலும்: வெளிச்சத்துக்கு வந்த மருத்துவ அரசியல்.

Sundar P  : இப்போது மருத்துவ உலகத்தில் மட்டுமல்ல... உணவுச் சந்தையிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருப்பது எண்ணெயும் கொலஸ்ட்ராலும்தான். அப்படி என்ன மாற்றம் நடந்துவிட்டது எண்ணெய் பயன்பாட்டில்? பண மதிப்பிழப்பு விவகாரத்தில், நாமெல்லாம் புதிய இரண்டாயிரம் ரூபாய்க்காக ஏ.டி.எம் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, மருத்துவ உலகம் கொலஸ்ட்ரால் பற்றி, தான் ஏற்படுத்தி வந்த விழிப்புஉணர்வை வாபஸ் பெற்றுக்கொண்டது. மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில், கொலஸ்ட்ரால் பற்றிய தொடர் விவாதங்கள் உருவாகவும், கொழுப்பு பயமுறுத்தலை வாபஸ் பெறவும் காரணம் 2015-ம் ஆண்டின் யு.எஸ்.டயட்ரி அட்வைசரி கமிட்டியின் (USDA) அறிவிப்புதான். நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் குதிரை வண்டியில் மைக் கட்டி பிரசாரம் செய்யும் அளவுக்கு `கொலஸ்ட்ரால் உடம்புக்கு நல்லது அல்ல. எண்ணெய் மோசமானது’ என்று சொல்லிக்கொண்டிருந்த அமெரிக்க உணவியல் நிபுணர்கள், தலைகீழாக பல்டியடித்தார்கள். அமெரிக்காவின் பிரதான உணவாக இருந்த கொழுப்பு உணவுகள், இதய நோய் பயத்தால் ஒரு கட்டத்தில் தீவிர பிரசாரம் மூலம் கைவிடப்பட்டன. முட்டைகளையும், இறைச்சியையும் மிகக் குறைவாக அமெரிக்க மக்கள